அது டூப் இல்லை… அந்த Season ல அது ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது: ‘துணிவு’ பட அனுபவம் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர்..!

Author: Vignesh
5 January 2023, 7:45 pm

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ajith - updatenews360

இப்படத்தின் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த மாதம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Manju Warrier - updatenews360

இந்நிலையில், துணிவு டிரெய்லர் வந்த பிறகு நல்ல வரவேற்பை பெற்றது. துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ‘கண்மணி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துணிவு படத்தில், ஒரு சிலர் ஜெட் ஸ்கை சேஸிங் காட்சியில் இருப்பது அஜித் அல்ல டூப் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தது குறித்து கேட்கப்பட்டதற்கு, பதில் அளித்த மஞ்சு வாரியர், “அஜித் சார் ஓட்டாத வாகனங்களே இல்லை என்றும், ஜெட் ஸ்கை ஓட்ட எனக்கு சொல்லிக் கொடுத்ததே அஜித் சார் தான் எனவும், பேங்காக் நகரில் அந்த காட்சியை எடுத்ததாகவும், சூரியன் மறைவதற்கு முன் அந்த காட்சி எடுக்கப்பட வேண்டி இருந்ததானால், அந்த காட்சி எடுக்கும் போது ரொம்ப த்ரில்லிங்காக இருந்ததாகவும், அந்த காட்சியில் முழுவதும் நடித்தது அஜித் சார் தான் என்றும், என்னிடம் படப்பிடிப்பு உருவாக்க BTS வீடியோ ஆதாரம் கூட உள்ளது என நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தில், ஜெட் ஸ்கை சேஸிங் காட்சி கூறித்து பதில் அளித்துள்ளார்.

ajith - updatenews360 1
  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 488

    5

    0