மஞ்சு வாரியர் மகளா இது? அச்சு அசல் தீபிகா படுகோன் மாதிரியே இருக்காங்களே!
Author: Shree3 November 2023, 7:14 pm
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.
தொடர்ந்து பல வித்யாசமான கதைகளில் நடித்து வரும் மஞ்சு வாரியார் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கு 42 வயதாகிறது என்பதை நம்ப முடியாத அளவுக்கு வியக்க வைப்பார்.
மஞ்சுவாரியை தொடர்ந்து தற்போது அவரது மகளின் புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் அட நம்ம மஞ்சு வாரியருக்கு இவ்வளவு அழகான மகளா? என எல்லோரும் வாய்பிளந்து அந்த புகைப்படத்தை வைரலாக்கியுள்ளனர். மேலும், மீனாட்சி… பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போன்று இருப்பதாக ரசித்து வர்ணித்துள்ளனர்.