46 வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியரின் சொத்து மதிப்பு…. எத்தனை கோடி தெரியுமா?

Author:
10 September 2024, 8:32 pm

மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வரும் மஞ்சு வாரியர் கிட்டத்தட்ட 45 வயதாகியும் தற்போது வரை இளம் நடிகைகளுக்கு ஸ்டஃப் கொடுக்கும் வகையில் செம பிட்டான தோற்றத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

1995 ஆம் ஆண்டு சஷ்யம் என்கிற மலையாள திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். 1996 ஆம் ஆண்டு ஐந்து படங்களில் கதாநாயகி ஆக நடித்து உச்ச நட்சத்திர நடிகையாக இடத்தை படித்தார் .அதன் பிறகு தொடர்ந்து அவரது படங்கள் மாபெரும் ஹிட் அடித்ததால் மார்க்கெட் உச்சத்தை பிடித்து வைத்திருந்தார்.

Manju Warrier - updatenews360

மோகன்லால், மம்மூட்டி, திலீப், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த அவர் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1998 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மீனாட்சியை என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

இதனடி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து பெற்ற மஞ்சு வாரியர் கிட்டதட்ட 15 வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கி இருக்கிறார். இந்நிலையில் தற்போது இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மஞ்சுவாரியரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

manju warrier

மஞ்சு வாரியர் மலையாளத்தை தாண்டி தமிழிலும் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் என படங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னணி நாயகியாக கலக்கும் நடிகை மஞ்சு வாரியரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 142 கோடி முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 296

    0

    0