துணிவு பாடலில் உங்கள் குரல் எங்கே?.. Troll செய்தவர்களுக்கு மஞ்சு வாரியர் கொடுத்த பதிலடி..!

Author: Vignesh
19 December 2022, 1:00 pm

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இந்த படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் அவரே கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Manju-Warrier-2-Updatenews360

இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தனுஷ் உடன் ‘அசுரன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். தற்போது அஜித் படத்தில் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Manju-Warrier-2-Updatenews360

இயக்குனர் வினோத் இந்த கதை பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன், துணிவு படம் போட்டி போடுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

thunivu_updatenews360

இதனிடையே டிசம்பர் 9-ஆம் தேதி துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி இருந்தது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிரூத் பாடி இருக்கிறார். இந்த பாடலை வைசாக் எழுதி இருக்கிறார். இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் இன்று வெளியாகி இருந்தது.

Manju Warrier - updatenews360


இந்த நிலையில் இந்த பாடலில் மஞ்சு வாரியர் பாடியது போல காண்பித்தாலும் அவரது குரல் கேட்டகவில்லை என்று பலர் கேலி செய்து வந்தனர்.

Manju Warrier - updatenews360

மஞ்சு வாரியர் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ‘இந்த பாடலில் என் குரல் கேட்கவில்லை என்று கவலைப்படுபவர் கவலை பட வேண்டாம். அது வீடியோ பாடலுக்காக ரெக்கார்ட் செய்யப்பட்டு உள்ளது. உங்கள் அக்கரைக்கும் நன்றி. Trollகளை நான் என்ஜாய் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.’

Manju Warrier - updatenews360
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 499

    1

    0