காரை துரத்தி ஓடிவந்த ரசிகைக்கு மஞ்சுவாரியர் கொடுத்த சர்ப்ரைஸ் – நல்ல மனசு உங்களுக்கு!

Author: Shree
13 April 2023, 6:05 pm

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

தொடர்ந்து பல வித்யாசமான கதைகளில் நடித்து வரும் மஞ்சு வாரியார் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கு 42 வயதாகிறது என்பதை நம்ப முடியாத அளவுக்கு வியக்க வைப்பார்.

இந்நிலையில் அப்போது நடிகை மஞ்சு வாரியார் கேரளா எர்ணாகுளம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பி கொண்டிருக்கும்போது அவரை ஒரு பெண் காரில் வேகமாக பின்தொடர்ந்து வந்திருக்கிறார். அதை நீண்ட நேரம் கவனித்த மஞ்சு வாரியர், அவரது டிரைவரை வண்டியை நிறுத்த சொல்லி இருக்கிறார். அந்த பெண்ணை அழைத்து அட்வைஸ் கூறி இருக்கிறார்.

அந்த பெண் அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, “என் அம்மா உங்களது தீவிர ரசிகை, அவரது பிறந்தநாள் இன்று, அவருடன் நீங்கள் பேச வேண்டும்” என கூறி இருக்கிறார். உடனே சரி என கூறி அசிஸ்டன்ட்டிடம் நம்பர் கொடுத்துவிடும்படி கூறினார். சரி நான் நிச்சயம் பேசுகிறேன் நீங்கள் பத்திரமாக செல்லுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 474

    7

    1