லேடி சூப்பர் ஸ்டார் மகள் டாக்டரா?; ஷேர் செய்த மகள்; வியப்பின் உச்சத்தில் ரசிகர்கள்
Author: Sudha8 July 2024, 2:29 pm
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் திலீப் இவருடைய முன்னாள் மனைவி மஞ்சுவாரியார்.

மலையாள சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக அறியப்படுகிறார் மஞ்சு வாரியார்.
இவர்களுடைய மகள் மீனாட்சி.மஞ்சு வாரியார், திலிப் பிரிவின் போது அப்பாவுடன் இருக்கிறேன் எனக் கூறி அப்பாவுடன் சென்று விட்டார்.
சமீபத்தில் பாந்த்ரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய நடிகர் திலீப் தன்னுடைய மகளை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து இருந்தார்.பாந்த்ரா திரைப்படத்தில் தமன்னாவுடன் தான் நடனமாட இருப்பதாக தன் மகளிடம் தெரிவித்ததாகவும் அவர் மகள் தமன்னாவுடன் நடனமாடி என்னை வெட்கமடைய செய்யாதீர்கள் என சொன்னதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இவர்களின் மகள் மீனாட்சி பற்றிய புதிய அப்டேட் ஒன்று கிடைத்திருக்கிறது. அவர் சென்னையில் படித்து இப்போது மருத்துவராகி இருக்கிறாராம்.அவ்வப்போது தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.
https://www.instagram.com/reel/C9Egt_9RG1U/?utm_source=ig_web_copy_link