என்னது 60 கோடியா.. தமிழகத்தில் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்.. உடம்பே சிலிர்த்துருச்சு..!
Author: Vignesh4 March 2024, 12:37 pm
தென்னிந்திய சினிமாவில் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ் இந்த திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழகத்தில் தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்குனர் சிதம்பரம் எடுத்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், கமலஹாசனின் குணா படத்தை மஞ்சுமெல் பாய்ஸ் படத்துடன் இணைத்து அவர் செய்த மேஜிக் திரையரங்கில் வேற லெவலில் செட்டானது என்று சொல்லலாம். இப்படத்தை, பார்த்துவிட்டு மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் நேரில் அழைத்து பாராட்டினார் கமலஹாசன். மேலும், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கூட இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் உலக அளவில் இதுவரை 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டுமே பதினைந்து கோடி வரை இப்படம் வசூல் செய்து உள்ளதாகவும், மலையாளத்தில் வெளிவந்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ் செய்துள்ளது.
இதுவரை கேரளாவில் இருந்து தமிழகத்தில் ரிலீஸ் ஆன திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்றால் அது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான். இந்நிலையில், இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் தற்போது கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.