மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் மீது #MeToo குற்றச்சாட்டு.. நடிகையிடம் தவறாக நடந்து கொண்டாரா?..
Author: Vignesh9 March 2024, 3:31 pm
தென்னிந்திய சினிமாவில் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ் இந்த திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழகத்தில் தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்குனர் சிதம்பரம் எடுத்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், கமலஹாசனின் குணா படத்தை மஞ்சுமெல் பாய்ஸ் படத்துடன் இணைத்து அவர் செய்த மேஜிக் திரையரங்கில் வேற லெவலில் செட்டானது என்று சொல்லலாம். இப்படத்தை, பார்த்துவிட்டு மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் நேரில் அழைத்து பாராட்டினார் கமலஹாசன். மேலும், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கூட இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ஜான் ஈ மேன் படத்தில் நடித்த நடிகை பிராப்தி எலிசபெத் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை கமெண்ட் பக்கத்தில் அடுக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, வாட்ஸ் அப்பில் தனி குரூப்பையே வைத்துக்கொண்டு மோசமாக சிதம்பரம் எப்படி மெசேஜ் செய்வார் என்றும், அவருடைய படத்தில் நடிக்கும் போது தனக்கு கொடுக்கப்பட்ட டார்ச்சர்கள் குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது, அந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இயக்குனர் சிதம்பரம் இப்படிப்பட்டவரா என சோசியல் மீடியாவில் தற்போது, பலரும் அவரை விளாசி வருகின்றனர். மேலும், அந்த நடிகை இதற்கு முன் இது குறித்து வாய் திறக்காமல், படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததும் ஏன் இயக்குனர் இப்போது பேசுகிறார் என்றும், ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனருக்கு எதிராக பிராப்தி எலிசபெத் MeToo சர்ச்சையை கிளப்பி இருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.