பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் உலகளாவிய வசூல் இத்தனை கோடியா..!

Author: Vignesh
14 March 2024, 5:40 pm

தென்னிந்திய சினிமாவில் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ் இந்த திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழகத்தில் தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்குனர் சிதம்பரம் எடுத்துள்ளார்.

manjummel boys

அது மட்டும் இல்லாமல், கமலஹாசனின் குணா படத்தை மஞ்சுமெல் பாய்ஸ் படத்துடன் இணைத்து அவர் செய்த மேஜிக் திரையரங்கில் வேற லெவலில் செட்டானது என்று சொல்லலாம். இப்படத்தை, பார்த்துவிட்டு மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் நேரில் அழைத்து பாராட்டினார் கமலஹாசன். மேலும், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கூட இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

manjummel boys

இந்நிலையில், தமிழகத்தில் கேரளாவை விட அதிகமாக கொண்டாடப்பட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் கடந்த சில தினங்களுக்கு முன் தான் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது உள்ளது. முன்னதாக, இப்படம் தற்போது ரூ.175 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து Industry Hit கொடுத்து உள்ளது. இதன்மூலம், மஞ்சும்மல் பாய்ஸ் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படமாகவும் சாதனை படைத்து உள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ. 200 கோடியை இப்படம் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manjummel boys

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 231

    0

    0