போஸ்டரை பார்த்து ஏமாந்து போய்டாதீங்க : உள்ள ஒரு சின்ன பிட்டு கூட இல்லை..? மன்மதலீலை திரைவிமர்சனம்..!

மணிவண்ணன் பால சுப்ரமணியம்மின் கதையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் ‘மன்மதலீலை’. மாநாடு திரைபடத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த வெற்றியை பெறுகிறார்.

சில காரணங்களால் திரையரங்குகளில் மதியம் படம் வெளியானது. குதையின் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வனின் வாழ்க்கையில் 2010ல் நடந்த ஒரு சம்பவம் பின் பத்து ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு சம்பவம். இரண்டுக்கு இடையே இருக்கும் சிக்கலான கிளுகிளு தொடர்பு என்ன? அதற்கான தீர்வு என்ன? என்பதே படத்தின் திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்று இருக்கிறார் வெங்கட் பிரபு.
மன்மத லீலை என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதால் இரட்டை அர்த்த வசனங்கள், ஓவர் கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்திருக்கும் என எண்ணி படம் பார்க்க சென்றவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

அப்படி படத்தில் இருந்த கிளுகிளு காட்சிகளை மன்மதலீலை படத்தின் ட்ரெய்லரிலேயே வைத்துவிட்டார்கள். படத்தில் அவை குறைவுதான். குறிப்பாக இந்தப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்பது படத்தின் வெற்றிக்கு உதவியுள்ளது.

ஆர்குட், யாஹூ மெசஞ்சர் காலத்தில் இண்டர்நெட் மூலம் தனக்கு அறிமுகமாகும் பெண்ணோடு உறவு கொள்கிறார் அசோக் செல்வன். அது நடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த சம்பவம். அஷோக்செல்வன், குடும்பம் மற்றும் குழந்தை என்றான பிறகு முந்தைய சம்பத்தோடு தொடர்புடைய நபர்கள் கொண்டுவரும் சிக்கல் மற்றும் தீர்வு என விரிகிறது இரண்டாம் பாதி.

சுவாரஸ்ய காட்சிகளுமின்றி ஒரே டோனில் சென்றது படத்தின் முதல் பாதியில் சற்று சோர்வை தருகிறது. படத்தில் கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகளை வைத்து விளையாட போதுமான வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் அதனை செய்ய தவறி விட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.

படத்தின் முதல் பாதி ஏற்ற இறக்கமற்ற நிலையில் சென்றாலும் இரண்டாம் பாதியில் இயக்குநர் நம்மை ஓரளவு கதையுடன் ஒன்ற வைத்துவிட செய்திருக்கிறார். கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகளுமே கூட முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதியில் அதிகம் இருக்கின்றன. வெங்கட் பிரபுவின் வித்யாசமானா க்ளைமேக்ஸ் படம் பாத்ததற்கான நிறவைத் தந்துள்ளது.

தெகிடி, ஓ மை கடவுளே, என ஒவ்வொரு படத்திலும் தனது ஆபார நடிப்பை வெளிப்படுத்திய அசோக் செல்வன் இந்த படத்திலும் சிக்சர் அடித்துள்ளார்.
ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே முவருமே தங்கள் கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்கள். ப்ரேம் ஜி படத்தின் துவக்கத்தில் ஒரு காட்சியில் வருகிறார். படத்தில் வரும் பி.ஜி.எம் இசைக்காக அந்த படத்தின் இசைப்பாளர் ப்ரேம் ஜி’க்கு பாராட்டுகள். மன்மத லீலை படம் ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு கொடுத்த கலகலப்பான சின்ன கிப்ட்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

12 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

13 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

14 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

14 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

14 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

15 hours ago

This website uses cookies.