போனவன் என்னையும் கூப்பிட்டு போயிருக்கலாம்… கதறி அழுத மனோபாலா – வைரல் வீடியோ!

Author: Shree
11 May 2023, 9:57 am

மறைந்த நடிகர் மனோபாலா இயக்குநர், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவிடம் ஆரம்ப காலதில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

1982ல் ஆகாய கங்கை எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், ரஜினியின் ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைபறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்ளை இயக்கியுள்ளார். சந்திரமுகி, அரண்மனை, துப்பாக்கி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும், சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார். பின்னர் லேசான மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மே மாதம் 3ம் தேதி மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினரை பெரு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மனோ பாலா உயிரோடு இருந்த போது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் விவேக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததை ஒரு நண்பனாக தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என கதறி அழுத மனோபாலா…. போனவன் என்னையும் கூப்பிட்டு போயிருக்கலாம் என வேதனையோடு தெரிவித்துள்ளார். அவர் விருப்பத்தின்படியே நண்பன் விவேக் அவரை அழைத்துசென்றுவிட்டார். நல்ல நட்பு .. உங்கள் இருவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1073

    2

    1