யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

Author: Selvan
28 March 2025, 12:57 pm

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து

தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் படியுங்க: பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

1999 ஆம் ஆண்டு வெளியான “தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மனோஜ்,அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஆனால்,அவரின் நடிகர் வாழ்க்கை எதிர்பார்த்த அளவிற்கு வளரவில்லை.அது மட்டுமல்லாமல், இயக்குநராகவும் வெற்றி பெறவேண்டும் என்ற கனவுடன் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

Manoj Bharathiraja Cause of Death

மனோஜின் திடீர் மரணம் தொடர்பாக,திரைப்பட உலகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, நடிகர் தம்பி ராமையா மிகுந்த வருத்தத்துடன் “மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இறக்கவில்லை.மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம்.வெற்றிபெற்ற இயக்குநரின் மகனாக பிறந்ததால், அவர்மீது பல எதிர்பார்ப்புகள் சமூகத்தால் விதிக்கப்பட்டன,தொடர்ந்து ‘அடுத்த படம் எப்போது? பெரிய படம் எதுவும் இல்லையே?போன்ற கேள்விகள் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தின.அந்த சுமையை சமூகம் அவர்மீது தூக்கி வைத்துவிட்டது.”

அதேபோல்,ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும்,தொழிலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற சமூக அழுத்தம் பலரை மனஅழுத்தத்திற்கு தள்ளுகிறது.குழந்தைகள் பெற்றோரின் பெயரைத் தொடர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கக்கூடாது.ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை முறையிலும்,விருப்பத்திலும் வெற்றி பெறும் உரிமை உள்ளது என்பதை சமூகமாக புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!
  • Leave a Reply