2 மாதத்திற்கு முன்னரே சொன்ன மனோஜ் சகோதரி… நெப்போலியன் போட்ட பதிவு!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2025, 8:51 am
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர்,பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதி ராஜாவின் மகனான மனோஜ், தந்தை இயக்கத்தில் தாஸ்மஹால் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அல்லி அர்ஜூனா, சமுத்திரம், ஈரநிலம், கடல் பூக்கள் போன்ற படங்களில நடித்துள்ளார்.
இதையும் படியுங்க: பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!
இவர் மாரடைப்பு காரணமா நேற்று மரணமடைந்த செய்தி, தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நெப்போலியன் உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், மதிற்புக்கும் மரியாதைக்கும் உரிய எங்கள் குருநாதர் இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியுற்றோம்…! மிகவும் வேதனையாக இருக்கிறது..!
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மலேசியாவில் வசிக்கும் எங்கள் குருநாதரின் மகள் ஜனனி வீட்டிற்கு சென்று இருந்தோம்..! அப்போது வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் விசாரித்தோம்..! அப்போது ஜனனி, அவரது அண்ணன் மனோஜ் உடல் நிலைப்பற்றி விவரித்தார் ..!
இப்பொழுது நன்றாக இருக்கிறார் என்று சொன்னார்..! அதற்குள் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை..! அவர்கள் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை..!
எங்கள் குருவிற்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும்,அவரது உற்றார் உறவுனர்களுக்கும், நண்பர்களுக்கும், திரு. பாரதிராஜா அவர்களின் கோடானு கோடி ரசிகர்களுக்கும், அன்புத்தம்பி மனோஜ்ன் ரசிகர்களுக்கும், எங்களது ஆழ்ந்த இரங்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! என பதிவிட்டுள்ளார்.
2 மாதத்திற்கு முன்னரே மனோஜிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.