கோமணத்தை உருவி அனுப்பிடுவேன்.. நடிகர் மன்சூர் அலி கான் ஆவேச பேச்சு..!

Author: Vignesh
21 November 2023, 6:57 pm

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த டிஜிபிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

mansoor ali khan

இதனிடையே, இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஊடகங்கள் முன்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும்.

பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களைப் பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட போது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை. நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது. நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை, என தெரிவித்துள்ளார்.

மேலும், எடிட் செய்த வீடியோவை பார்த்து நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நான் தப்பு செய்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்பு கேட்கிற ஜாதியா… மன்னிப்பு கேட்கிற மனுஷனா… இதுகுறித்து, நடிகர் சங்கத்திடம் பேசி இருக்கிறேன். அங்கு த்ரிஷாவை வரவைத்து நான் பேசிய முழு வீடியோவையும் போட்டு காட்டுவேன், அப்போது தான் அவங்களுக்கு உண்மை புரியும் என்றார்.

mansoor ali khan -updatenews360

நடிகர் சங்கம் இப்போது மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இந்த மாதிரியான வீடியோ வந்தால் இதை பற்றி என்னிடம் கேள்வி கேட்டு இருக்கலாம். ஆனால் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. போன் செய்யவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தால் நீதிபதி பார்த்தவுடன் தண்டை கொடுப்பாரா? நடிகர் சங்கம் மிக பெரிய தவறு செய்துவிட்டது. நான் மட்டும் எரிமலையாக மாறினால் துண்டு காணும் துணிய காணும் கோமணத்தை உருவி அனுப்பிடுவேன் என்று மன்சூர் அலி கான் பேசியுள்ளார்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…