“தளபதி 67”- புதிய அப்டேட்: விஜய் கூட இப்போ நடிக்கிறது ரொம்ப சந்தோஷம் : ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்த வில்லன் நடிகர்..!
Author: Vignesh26 December 2022, 8:00 pm
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் அஜித்குமாரின் துணிவு படத்துடன் மோதுகிறது. இதனால், அஜித், விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே, இரு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களால் இரு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.
இதில், ஒருபடி மேலே சென்று வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் மாஸான என்ட்ரி கொடுத்தார். மேலும், அவரது பேச்சுக்கு விழா அரங்கமே அதிர்ந்து போனது.
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாகவும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்றது. தளபதி 67 திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்ற நிலையில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசி அவர், “லோகேஷ் சார் படத்தில் ஒரு பெரிய வேடம் என சொல்லியிருக்கிறார்கள்…” என்றும், “தளபதியுடன் முன்பே நான்… அவருடைய முதல் படத்திலேயே நான் தான் வில்லனாக நடித்தேன். அவருடன் 10 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன் என நினைக்கிறேன் என்றும், இடையில் கொஞ்சம் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.