தலைவன் என்ஜாய் பண்றாப்புல… நா ரெடி தான் வரவா – கார் ஓட்டிகிட்டே செம Vibe ஆன மன்சூர் அலிகான் (வீடியோ)
Author: Shree1 July 2023, 4:23 pm
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.
இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.
அண்மையில் நான் ரெடி தான் வரவா பாடலில் கூட மன்சூர் அலிகான் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் கார் ஓட்டிக்கொண்டே “நா ரெடி” பாடலுக்கு செமயா vibe செய்யும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 61 வயதான நடிகர் இவ்வளவு எனர்ஜியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்து லைக்ஸ் குவித்து ஷேர் செய்து வருகிறார்கள்.
Mansoor Ali Khan Vibing #NaaReady ? #Leo @actorvijay pic.twitter.com/3uANDuhDKV
— ????? ??? ??????ⱽᵀᴹ (@VTMOffl) June 28, 2023