POISON கொடுத்துட்டாங்க.. விஷம் கலந்து கொள்ள முயற்சியா? பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்..!

Author: Vignesh
18 April 2024, 6:18 pm

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாஇதனிடையே கவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது. இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார் மன்சூர் அலிகான். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இவர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதன் பின்னர் குடியாத்தத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mansoor

மேலும் படிக்க: கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா? அந்த காட்சிகளில் நடிக்கிறாரா தீபிகா படுகோன்..!

அதில், குடியாத்தம் சந்தையிலிருந்து பிரச்சார பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது கட்டாயப்படுத்தி பழச்சாறு மற்றும் மோர் கொடுக்கப்பட்டது என்றும், அதனை குடித்த சில நிமிடங்களில் நெஞ்சு வலியும் மயக்கமும் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்று மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மன்சூர் அலிகானை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதா என்றும் பல்வேறு கோணங்களில் மக்களிடையே கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

mansoor
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!