சூப்பரா சப்*** Star கதையெல்லாம் என்கிட்ட கேட்காதே… ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர் மட்டுமே – காண்டாகிய மன்சூர் அலிகான்!

Author: Shree
11 October 2023, 10:36 am

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் பட்டத்தின் சர்ச்சை குறித்து உங்களது கருத்து என்ன? என்று கேட்டதற்கு ” சூப்பரா சப்புற ஸ்டார் கதையெல்லாம் என்கிட்ட பேசாதே என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது எம்ஜிஆர் மட்டும் தான் என்று மன்சூர் அலிகான் காட்டமாக பதில் அளித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!