விஜய் தமிழ்நாட்டின் நாளைய தீர்ப்பு.. மன்சூர் அலி கான் ஆருடம்..!

Author: Vignesh
2 November 2023, 10:33 am

‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜயும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சேர்ந்த 2வது படம் ‛லியோ’. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே கடந்த மாதம் அக்டோபர் 19ல் தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

leo-updatenews360

கடந்த 12 நாட்கள் முடிவில் ரூ.540 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடந்து முடிந்தது.

இந்த விழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வரும் நிலையில் இவரது பேச்சு அதிகம் கவனிக்கப்பட்டது.

leo-updatenews360

இந்த விழாவில் நடிகர் விஜய், ‛‛நான் ரெடி.. வரவா.. ” எனும் பாடல் மூலம் உரையை தொடங்கினார். விஜய் பேச தொடங்கியதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் நிகழ்ச்சி களைக்கட்டியது. இதையடுத்து நடிகர் விஜய் பேசினார். அப்போது பல சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், லியோ வெற்றி விழாவில் மன்சூர் அலிகான் பேசுகையில், லியோ flashback பொய் என இயக்குனரே சொல்லிவிட்டார். பலரும் என்னிடம் அதைப் பற்றி கேட்கிறார்கள் என மன்சூர் அலிகான் பேசியிருக்கிறார்.

leo-updatenews360

மேலும், விஜய் தமிழ்நாட்டில் நாளைய தீர்ப்பு என்றும், தமிழ் நாடு சீரழிந்து கிடக்கிறது என்றும், உங்கள நம்பிதான் நாடு இருக்கு எனவும், நாளைய தீர்பை எழுத தயாராகுங்கள் என்று மன்சூர் அலிகான் தெரிவித்து இருக்கிறார். இதேபோன்று படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் விழாவில் பேசியுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 524

    0

    0