கருப்பு எம்.ஜி.ஆரே….. ஆயிரக்கணக்கானோரை வாழவைத்த ஆலவிருட்சமே – மன்சூர் அலிகான் கண்ணீர் அறிக்கை !
Author: Shree1 டிசம்பர் 2023, 7:13 மணி
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாஇதனிடையே கவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.
இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து மிகவும் கொச்சையாக முகம் சுளிக்கும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் கண்டங்கள் தெரிவித்தனர்.
இப்படியான நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவருவது குறித்து அறிந்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான், “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!!
கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்?
மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி … உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு.
யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குளர் நிறைய. கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய் ! மகராசி அம்மாவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானாய் ! மகராசியை மரணிக்கச் செய்துவிட்டனர். எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு !!
கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா …100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை: தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே…வாழிய வாழிய நூறாண்டு ‘!! தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூரலிகான்! என கண்ணீருடன் அறிக்கை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் திசைதிருப்பியுள்ளார்.
0
0