மீன் வீடு தேடி வருவது.. வறுத்து சாப்பிட்டது போக மிச்சம் இருக்கு.. மன்சூர் அலிகானின் வைரல் வீடியோ..!

Author: Vignesh
8 December 2023, 12:45 pm

அவ்வப்போது மன்சூர் அலிகான் பேசும் வீடியோ சர்ச்சையாகவோ அல்லது காமெடியாகவோ வைரல் ஆவதுண்டு. அந்த வகையில், திரிஷா பற்றி பேசியது பெரிய சர்ச்சையானது.

தற்போது, சென்னை வெள்ளம் பற்றி மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அருகம்பாக்கத்தில் இருக்கிறேன். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. டேம் தண்ணீர் திறந்து விட்டால் தண்ணீர் வந்துவிடும் ஒண்ணுமே பண்ண முடியாது. எல்லாரும் தாழ்வாக கட்டி இருக்காங்க நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பித்து விட்டேன்.

ஆனால், மீன் வீட்டுக்குள் வந்துடுச்சு, செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருது. மிகப்பெரிய அதிசயம் வறுத்து சாப்பிட்டது, போக மிச்சம் கொஞ்சம் இருக்கு இனி பொரித்து சாப்பிடணும். எல்லாத்துக்கும் கார்ப்பரேஷன் மற்றும் கவர்ன்மெண்டை குறை சொல்லிட்டு இருக்க முடியாது. பல இடங்களில் ஏறியாக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதால், தான் இந்த வேதனையை தாங்க வேண்டி இருக்கு என்று மன்சூர் அலிகான் பேசிய வீடியோ தற்போது x வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 435

    0

    0