திரிஷாவுக்கு பாலியல் அவமரியாதை கொடுத்த மன்சூர் அலிகான் – கொந்தளித்த நட்சத்திர பிரபலம்!

Author: Shree
19 November 2023, 8:17 am

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகோடு பொம்மை போன்றே இருக்கிறார். சினிமாவிற்கு வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகியும் எவர்க்ரீன் நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் திரிஷா இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இடையில் சில ஆண்டுகள் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் பின்தங்கியிருந்த அவர் 96 படத்திற்கு பின்னர் மீண்டும் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

இந்நிலையில் லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து மிகவும் கொச்சையாக முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார். அதாவது லியோ படத்தில் வில்லனான என்னை திரிஷாவை கற்பழிக்கவே விடல… காஷ்மீர் பணியில் அவரின் பஞ்சு மேனி பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது. திரிஷாவை கட்டிலில் தூக்கிப்போட்டு அவரை கற்பழிக்கும் சீன் பண்ணனும்னு எனக்கும் ஆசையா இருந்துச்சு என்றெல்லாம் முகசுளிக்கும் வகையில் பேசி ஒட்டுமொத்த திரையுலத்தையே தலைகுனிய வைத்துள்ளார் மன்சூர் அலிகான்.

இந்நிலையில் இவரின் இந்த வீடியோவை பார்த்து கடுங்கோபம் அடைந்த நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “சமீபத்தில் திரு.மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாகவும் கேவலமாகவும் பேசிய ஒரு வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன் மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுப்பு மற்றும் மோசமான ரசனையைக் காண்கிறேன். அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற பரிதாபத்திற்குரிய ஒருவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என கொந்தளித்து பேசியுள்ளார்.

இதையடுத்து திரிஷாவுக்கு பதில் அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியதால், திரு. மன்சூர் அலி கான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தோம். பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான மரியாதை எந்தத் துறையிலும் பேச்சுவார்த்தைக்குட்படாத ஒன்றாக இருக்க வேண்டும், இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 326

    0

    0