சோறு தண்ணி இன்றி 10 மணி நேரம் விஜயகாந்தின் காலடியில் மன்சூர் அலிகான் – நட்பின் நன்றி உணர்வு!

Author: Rajesh
31 December 2023, 8:25 pm

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாஇதனிடையே கவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்திருந்தார்.

மன்சூர் அலிகான் விஜயகாந்த் படங்களில் அவருக்கு வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றவர். இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வப்போது விஜயகாந்தை பற்றி பெருமையாக பேசுவார் மன்சூர் அலிகான். இந்நிலையில் கேப்டனின் மறைவால் மிகுந்த துயரத்திற்கு ஆளான மன்சூர் அலிகான் அவரது உடலின் அருகிலே சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சோறு தண்ணி இன்றி கிடந்துள்ளார். கேப்டன் உடலின் காலடியில் மிகுந்த துயரத்தோடு சாய்ந்துகிடக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்கள் எங்கும் பரவி ” நட்பின் நன்றி உணர்வு” என்றால் இது தான் என பலரும் அவரை பாராட்டி தள்ளியுள்ளனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 542

    0

    0