முதல்வர் யார்னு தெரியாது….ஆனால் தளபதி யார்னு தெரியும் – ஒலிம்பிக் வீராங்கனை பதில்!

Author:
20 August 2024, 6:43 pm

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரிடம் தமிழ்நாடு குறித்து மாணவி எழுப்பிய சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதிலும் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றவர் இந்திய வீராங்கனையான மனு பாக்கர். இவருக்கு சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவருக்கு துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டதுடன் கிரீடம் , மலை அணிவித்து பள்ளி மாணவர்கள் அவரை மிகுந்த வரவேற்போடு அழைத்து வந்தனர். அப்போது மாணவர்களுடன் உரையாடிய வீராங்கனை மனு பாக்கரிடம். மாணவிகள் சில சுவாரஸ்யமான கேள்விகளை கேட்க அதற்கு அவர் கூறிய பதில்தான் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது முதல்வர் மு க ஸ்டாலினை தெரியுமா? என கேட்டதற்கு….. தெரியாது எனக் கூறினார். உடனே நடிகர் விஜய் தெரியுமா? எனக்கு கேட்டதற்கு ஆம் தெரியும் என பதில் அளித்தார். அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாக நெட்டிசன் எல்லோரும் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். ஸ்டாலின் தெரியாதா? என் மனசுலே இருந்த பாரமே கொரஞ்சிருச்சு. டம்மி தளபதி ஸ்டாலின்….ஒரிஜினல் தளபதி விஜய் என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!