எட்டிப்பார்த்த நபரை ஹீரோவா மாற்றிய பாரதிராஜா…மாஸ் ஹிட் ஆன படம்…!
Author: Selvan9 December 2024, 5:23 pm
பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தில் நடிகர் பாண்டியன் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்தும்,இயக்குநர் பாரதிராஜாவின் அபார கணிப்பு திறனைப் பற்றியும் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
மண்வாசனை படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்குவதற்கு முன்பு, கதாநாயகன் தேர்வு செய்யப்படவில்லை. நானும்,இயக்குநர் பாரதிராஜா மற்றும் படக்குழு இணைந்து பல்வேறு கல்லூரிகளில் ஹீரோவாக நடிக்க யாராவது பொருத்தமாக இருக்கின்றனரா என்று தேடியும்,யாரையும் தேர்வு செய்ய முடியவில்லை.
இதையும் படியுங்க: கருத்தடை மாத்திரையால் வந்த வினை…சொத்தில் பங்கு கேட்ட விவாகரத்து நடிகை…!
உடனே மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலுக்கு சாமி தரிசனம் பண்ண போனோம்.அங்கே பாரதிராஜாவை பார்க்க கூட்டம் அலைமோதியது.அதில் ஒரு இளைஞன் மட்டும் குதித்து குதித்து பாரதிராஜாவை பார்க்க முயற்சி பண்ணிட்டு இருந்தான்.
அதனை கவனித்த பாரதிராஜா என்னை கூப்பிட்டு அந்த பையனை காரில் ஏற்று என்று சொன்னார்.நானும் அவருக்கு வேண்டிய பையன் போல நினைத்து காரில் ஏற்றினேன்.
அந்த இளைஞனை ரூமுக்கு அழைத்து சென்று நடக்க சொன்னார்,சிரிக்க சொன்னார் பின்பு ஒரு வசனத்தை கொடுத்து பேச சொன்னார்,அந்த இளைஞன் பண்ணுறதை பார்த்து கொண்டே பாரதிராஜா என்னிடம் வந்து இவன் ஹீரோக்கு பொருத்தமா இருப்பான் என கூறி சென்றுவிட்டார்.அந்த இளைஞன் தான் நடிகர் பாண்டியன்.
பாண்டியன் கதாநாயகனாக நடித்த மண்வாசனை வெற்றிப்படமாக அமைந்தது . அதன்பின் அவர் 40 படங்களில் ஹீரோவாக நடித்ததோடு, மொத்தம் 80 படங்களில் நடித்தார்.
“பாரதிராஜாவின் கணிப்பு எந்த ஒரு நேரத்திலும் தவறா சென்றதில்லை.அவர் ஒரு ஹீரோக்கு தேவைப்படும் எல்லாவற்றையும் ஒரே பார்வையில் கண்டறிவார்.”என்று அந்த பேட்டியில் சித்ரா லட்சுமணன் கூறியிருப்பார்.