படத்துல வசனமே இல்ல.. வெறும் கெட்ட வார்த்தையா இருக்கு : விடுதலை 2 படக்குழு மீது சென்சார் போர்டு காட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2024, 1:48 pm
வெற்றிமாறன் இயக்கும் படங்களில் கெட்டவார்த்தைகள் இருக்கும் என்பது இயல்பாகவே இருக்கும் விஷயம். அவை பெரும்பாலும் படத்தின் கதைக்கு ஏற்றவாக இருக்கும்போது, அவற்றை தவிர்க்க முடியாமல் வெற்றிமாறன் தன் படங்களில் சேர்த்து விடுகிறார். படங்கள் சென்சாருக்கு அனுப்பப்பட்ட பின், அதிகாரிகள் அவற்றை திருத்தி விடுவார்கள்.
அந்த விதத்தில், வெற்றிமாறன் இயக்கிய புதிய படமான ‘விடுதலை’ படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்த போது, படத்தில் உள்ள கெட்டவார்த்தைகள் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. படத்தில் வரும் அந்த கெட்டவார்த்தைகளை சென்சார் குழு ஒளிபரப்பும் போது மியூட் செய்து, சில காட்சிகளையும் அகற்றுவது குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி பேசும் காட்சிகள் உள்ளதால், அவற்றை மாற்ற வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என கூறப்பட்டது. அதேபோல், சமூகங்களை குறிக்கும் ஒரு வசனமும் சென்சாரால் படத்திலிருந்து நீக்கப்பட்டது. மேலும், உண்மையான அரசியல் அமைப்புகளை பற்றி குறிப்புகள் உள்ளதால், அந்தக் குறிப்புகளை மாற்றி, படக்குழுவுக்கு புதிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
வரும் டிசம்பர் 20-ஆம் தேதி ‘விடுதலை 2’ படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டிரைலர் அதிக வரவேற்பை பெற்று, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.