இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு தெருக்கூத்து ஆடியிருக்கிறார். அதன் தழுவலாகவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.
தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளி இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் இப்படத்தை இயக்கினார். முதல் படம் அவருக்கு பல விருதுகளை அள்ளிக்கொடுத்தது. பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 2018ம் ஆண்டு வெளியான இப்படம் ஒடுக்கப்பட்ட இனத்தையும் ஆதிக்க சாதியினரால் அவர்கள் படும் கொடுமைகளை குறித்தும் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மீண்டும் மாபெரும் ஹிட் கொடுத்தார். இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தில் இடப்பெற்ற ’ராசா கண்ணு’ என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், ஜூன் 29 ஆம் தேதி மாமன்னன் படம் திரையரங்கில் வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்தது. முன்னதாக ஆடியோ லான்ச் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், முன்னணி திரை பிரபலங்களான கமலஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், சூரி, வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கு நடிகர் கமலஹாசன் தலைமை தாங்கினார். ரஜினிகாந்த் மட்டும் இந்த விழாவிற்கு வரவில்லை. இந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தை பார்த்துதான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கியதாகவும், கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது என்றும், மாமன்னர் உருவாவதற்கு தேவர் மகன் படம் தன் காரணம் எனவும், தேவர் மகன் படத்தை பார்க்கும் போது தனக்கு ஏற்பட்ட வலியின் அதிர்வுகள் தான் இந்த மாமன்னன் படம் என்றும் தெரிவித்திருந்தார்.
எல்லா இயக்குனர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு படம் எடுப்பார்கள். தேவர் மகன் படம் தனக்கு ஒரு பெரிய மனப்பிறழ்வை உருவாக்கியது என்றும், நடப்பதெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்தது. இதை எப்படி தான் புரிந்து கொள்வது இந்த படம் சரியா தப்பா என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒரு வலி அந்தப் படத்தை பார்த்த பிறகு தனக்கு ஏற்பட்டதாகவும், தேவர் மகனில் இருக்கும் இசக்கித்தான் மாமன்னன் அதாவது, இசக்கி மாமன்னனாக, மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படம் என்று கமல்ஹாசனை வம்பு இழுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
இதனிடையே, கமலஹாசன் நிகழ்ச்சியில் அமைதியாக எதுவும் பேசாமல், மனதுக்குள் கோபத்தை வைத்துக் கொண்டிருந்ததாக நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் எடுத்தால் அது புரட்சி படம் மற்றவர்கள் எடுத்தால் அது ஜாதி படமா என கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் கமல் ரசிகர்களுக்கும் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கும் இடையே, பெரிய கலவரமே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில், கமல் நடித்த பாபநாசம் படத்தையும் மாரி செல்வராஜ் விமர்சித்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் பேசுகையில், பாபநாசம் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் அந்த பெண்ணின் தந்தை உன்னை வீடியோ எடுத்தால் அவன் தான் வெக்கப்பட வேண்டும் என்று சொல்ல மாட்டார். இந்த படம் இங்கே ஓடியது… ஏன் ஓடியது என்றால் அந்த படத்தில் அந்த அச்சம்தான் முதலீடு அவ்வளவு பெரிய கமல்ஹாசனே, அந்த பெண்ணிற்கு போலிஸிடம் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். ஆனால் எங்கேயும் வீடியோ எடுத்தால் பரவாயில்லை போடா மயிறுன்னு சொல்லி போய்கிட்டே இருக்கணும் என்று சொல்ல மாட்டார்.
அதுதான் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், இங்கே 250 பெண்களை வீடியோ எடுத்திருக்கிறார்கள். அதில் முதல் பெண் வீடியோ எடுத்தால், நீதானடா வெட்கப்படணும் நான் எதுக்கு வெக்கப்படணும்னு சொல்லி இருந்தால் 250 பெண்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இந்த வீடியோவை கண்டு பலரும் பாராட்டினாலும் மற்றொரு தரப்பு மாரி செல்வராஜ் பாபநாசம் படத்தை முழுமையாக பார்க்காமல் இப்படி பேசுகிறார். அந்த படத்தில் அந்த பெண் செய்த கொலையில் இருந்து தப்பிக்க வைக்க தான் அவர் முயற்சி செய்து இருப்பார். எந்த இடத்திலும் அந்தப் பெண் தவறு செய்தது போல காட்டப்படவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.