நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவத்திற்கு நீங்க தான் காரணம்… மாரி செல்வராஜ் – மோகன் ஜி மீது பாயும் குற்றசாட்டு!
Author: Shree12 August 2023, 10:06 am
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் சின்னத்துரை. மகனுக்கு 17 வயது ஆகிறது. அவர் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் மேற்கத்திய ஜாதியை சேர்ந்த மாணவர்கள் சின்னத்துரை ஜாதி ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மிகுந்த வேதனைக்குள்ளாகிய சின்னத்துரை வீட்டில் உள்ள தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கூறி அழுததோடு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியுள்ளார் மாணவர் சின்னத்துரை. இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மேற்கத்திய ஜாதி மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் நேராக மாணவன் சின்னத்துரை வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். மற்றும் தடுக்க வந்த தங்கையையும வெட்டியுள்ளனர்.
தற்ப்போது அண்ணன் தங்கை இருவரும் உயிருக்கு போராடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உருக்குலைய செய்துள்ளது. இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 6 மாணவர்களும் சிறார்கள் என்பதால் போலீஸ் பிடியில் உள்ளனர். அந்த சிறுமி தனது வாக்குமூலத்தில் 4 அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போயிட்டாங்க” எனும் கூறும்போது நெஞ்சை ரணமாக்குகிறது. மாணவச் சமுதாயம் தான் நாளைய இந்தியா எனும் சொல்லும் வேளையில் இது போன்று சாதி நஞ்சு அவர்களின் மனத்தில் கலந்தது வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இப்படியான நேரத்தில் ஜாதிய ரீதியிலான படங்களை எடுக்கும் இயக்குனர்களும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என சமூக அக்கறைக்கொண்ட பலர் வருத்தம் தெரிவித்து வருகிறார். இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டரில், ” மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டி கொள்கிறேன்.. இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நாங்குநேரி…
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 11, 2023
சாதி, மதவெறி கருத்தியல், இளந்தளிர்களின் வாழ்விலும், உளவியலிலும் ஏற்றியிருக்கும் விஷம் நம்மை உறைய வைக்கிறது.
சாதி ஒழிப்பில்
அரசும் சமூகமும் முன்னகர வேண்டிய கடமையின் ஆழத்தை உணர்த்துகிறது.
சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைந்து நலம் பெற விழைகிறேன். pic.twitter.com/3hcxzaBk4Y