ஜாதி வன்மம் கிளப்பி விடுறேனா? கம்முனு போய்டுங்க ஆத்திரத்தை கிளப்பாதீங்க – கொக்கரித்த மாரி செல்வராஜ்!

Author: Shree
18 ஆகஸ்ட் 2023, 5:43 மணி
mari selvaraj
Quick Share

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக முத்திரை பதித்தார். தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கினார். இவர் இயக்கிய மூன்று படங்களுமே ஜாதியை குறித்தும் பேசும் படமாக அமைந்தது. குறிப்பாக கீழ்த்தட்டு சாதியினரை மேல்தட்டு சாதியினர் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என தத்ரூபமாக காட்சிப்படுத்தி பெரும் சர்ச்சைக்குள்ளான இயக்குனராக பேசப்பட்டார்.

இந்நிலையில் அண்மையில் நாங்குனேரியில் மாணவர்களின் சாதி வெறிச்செயலுக்கு உங்களை போன்று சாதி படம் எடுக்கும் இயக்குனர்கள் தான் காரணம் என கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், நான் எடுத்த மூன்று திரைப்படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

எனவே மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார். மேலும் மாமன்னன் திரைப்படத்தில் ஜாதிய வன்மம் கொண்ட ஃபக்த் ஃபாசில் கதாபாத்திரம் பெருமளவில் சமூகவலைதளங்களில் கொண்டாடப்படுவது குறித்து கேட்கும் போது, “ அதை கொண்டாடினவர்களிடம் சென்று கேளுங்கள். உண்மையை பேசத்தான் படம் எடுக்கிறோம். படம் பார்க்க பார்க்க உண்மை பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என கூறினார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 395

    1

    0