படத்தில் மட்டும் தான் சக உரிமை… நிர்வாணமா அடித்து கொடுமை படுத்திய மாரி செல்வராஜ் – வீடியோ!

Author: Shree
29 March 2023, 8:28 am

இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு தெருக்கூத்து ஆடியிருக்கிறார். அதன் தழுவலாகவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளி இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் இப்படத்தை இயக்கினார். முதல் படம் அவருக்கு பல விருதுகளை அள்ளிக்கொடுத்தது. பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 2018ம் ஆண்டு வெளியான இப்படம் ஒடுக்கப்பட்ட இனத்தையும் ஆதிக்க சாதியினரால் அவர்கள் படும் கொடுமைகளை குறித்தும் வெளியானது.

இப்படத்தில் கதிரின் அப்பாவாக தெருக்கூத்து நடனக்கலைஞர் நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நிர்வாணமாக ஓடும் காட்சி தான் மிகப்பெரிய ஹைலைட். அது தான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்ப்போது வைரலாகி வருகிறது.

பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்கும்போது நான் ஒரு இடத்தில் டயலாக் பேச மறந்துவிட்டதால் என்னை பல பேர் முன்பு மாரி செலவராஜ் பளார் என ஒங்கி கன்னத்தில் அறைந்தார். உடனே நான் அழுதுவிட்டேன். சண்டாளப்பாவி… நான் படம் நடிக்க வரமாட்டேன் தான் சொன்னேன். 12 மணி ராத்திரியில் 30 பேர் ஒளிந்திருந்து வந்து என புடிச்சி தூக்கிட்டு வந்து கொலை செய்ய பாக்குறீங்களா என கோபமாக திட்டினேன். பின்னர் சமாதானம் செய்து என்னை மீண்டும் நடிக்க வைத்தார்கள் என தங்கராஜ் கூறியுள்ளார்.

ஒரு தெருக்கூத்து கலைஞனை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தது மட்டுமில்லாமல் அடித்து கொடுமைப்படுத்திய மாரி செல்வராஜை ரசிகர்கள் திட்டி தீர்த்துள்ளனர். நீங்க படத்தில் மட்டும் தான் சக உரிமை கொடுப்பீர்களா? நிஜத்தில் எல்லாம் போலியா? என விமர்சித்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.youtube.com/shorts/c8N931gSpK0

https://youtube.com/shorts/c8N931gSpK0?feature=share
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!