மாரி செல்வராஜ் ஒரு பெண்ணை கொடூரமாக…. பிரபலத்தின் பேட்டியால் பதறும் கோலிவுட்!
Author: Shree5 August 2023, 6:46 pm
தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார். .இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வசூலும் ஈட்டியது.
இந்நிலையில் இப்படம் குறித்தும் மாரி செல்வராஜ் பேசிய காமெடி நடிகர் டெலிபோன் ராஜ், மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ. அவர் சாதி பாகுபாடு குறித்து படமெடுத்து அழிந்துபோன சாதி வெறிகளை தூண்டிவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை அடித்து துன்புறுத்துகிறார் என அவர் காட்டமாக பேசியுள்ளார்.
இதனை உதயநிதியே பேட்டி ஒன்றில், ‘அவன் ஒரு சைக்கோ சார்.. எல்லாரையும் அடிப்பான்..’ என்றும் பல நடிகர்களை செட்டில் அடித்து விடுகிறார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்ணன் படத்தில் போலீஸ் அடிக்கும் காட்சியில் நிஜமாகவே ஒரு நடிகை அப்படி அடிக்கப்பட்டாராம். காரணம் அப்போ தான் உண்மையான நடிப்பு அவரிடம் வெளிப்படும் என்ன கூறியிருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?
மேலும் மாரி செல்வராஜ் சொந்த ஊரிலேயே படப்பிடிப்பு நடத்துவார். தன் சாதிக்காரர்களை மட்டும் டயலாக் பேச வைக்கிறார். சாதி வெறியை தூண்டி படம் எடுக்கும் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் போன்றோர்கள் சாதி வெறியை தூண்டி படம் எடுத்து இளைஞர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள். எனவே இனிமேல் இதுபோன்ற சாதி வெறியைத் தூண்டும் படங்களை எடுக்கக் கூடாது. இப்படிப்பட்ட படங்களை எடுக்க இயக்குநர் சங்கம் அனுமதிக்கக் கூடாது. இப்படிச் செய்தால் தமிழ் சினிமா வளர்ச்சி அடையாது” என கோபத்தோடு பேசியிருக்கிறார்.