அப்படி செய்வார்னு எதிர்பார்க்கவே இல்லை.. விஜய் குறித்து மாரி செல்வராஜ் வருத்தம்..!

Author: Vignesh
10 August 2024, 6:00 pm

தமிழ் சினிமா எதிர்பாக்காத ஒரு விஷயத்தை நடிகர் விஜய் அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வருத்தப்பட வைத்துவிட்டார் என்றே சொல்லலாம். அவர் அரசியலில் களமிறங்குவது அனைவருக்கும் சந்தோஷமான விஷயம் தான். ஆனால், தனது 69 ஆவது படத்திற்கு பிறகு இனி நடிக்க மாட்டேன் என அவர் கூறி இருப்பது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.

இப்போது, நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து பிரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும், அதனை தொடர்ந்து செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மாமன்னன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இப்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் படமாகும். சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசுகையில், சிறுவயதிலிருந்தே நான் விஜயின் தீவிரமான ரசிகர். மன்றம் எல்லாம் வைத்திருக்கிறேன். அவர் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்று பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 247

    0

    0