“இந்தாமா ஏய்”…. ஆவேசப்பட்டு பேசிய டயலாக்…. டப்பிங் பேசும்போதே மாரடைப்பு!

Author: Shree
8 September 2023, 10:49 am

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. இதில் அவர் ஆணவம், அகங்காரம் என பெண்களை அடிக்கு,அடிமைகளாக நடித்தும் ஆண்களை போன்று நடித்து மிரட்டி வந்தார் மாரிமுத்து.

marimuthu - updatenews360

இந்த சீரியலின் மாபெரும் வெற்றிக்கு மாரிமுத்து ஒரு முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். இந்த சீரியலை கோலங்கள் தொடரை இயக்கிய இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்க்க கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் நேரம் பார்த்து காத்திருந்து பார்த்து வந்தார்கள். இதில் மாரிமுத்துவின் நடிப்பு தான் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.

நடிகர் மாரிமுத்து நிறைய திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த சில நாட்களாக புகழின் உச்சத்தில் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வந்த மாரிமுத்து நீயா நானா, தமிழா தமிழா மற்றும் பல்வேறு யூடியூப் சேனல்களில் கூட பேட்டி கொடுத்துவந்தார். இந்நிலையில் யாரும் நம்ப முடியாத அளவிற்கு நடிகரும் இயக்குனரும் ஆன மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார்.

தற்போது அவரது மரணம் குறித்து அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. அதன்படி மாரிமுத்து, இன்று காலை 8:30 மணிக்கு எதிர்நீச்சல் சீரியலின் டயலாக்கை ஆவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகிறது. ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர் ஒருவர் டப்பிங் பணியில் இருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!