பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஆணவம், அகங்காரம் என பெண்களை அடிக்கு,அடிமைகளாக நடித்தும் ஆண்களை போன்று நடித்துள்ளார்.
இந்த சீரியலின் மாபெரும் வெற்றிக்கு மாரிமுத்து ஒரு முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். இந்த சீரியலை கோலங்கள் தொடரை இயக்கிய இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்க்க கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் நேரம் பார்த்து காத்திருந்து பார்க்கிறார்களாம்.
ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்றும் அவர்களிடம் இருந்து பெண்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதே இந்த தொடரின் கதை. இதில் ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியுள்ள மரிமுத்துவை பல யூடியூப் சேனல்கள் தொடர்ந்து பேட்டி எடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் சமீபத்தியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மாரிமுத்து, ஜோஷியர்கள் சொல்வது எதுவுமே நடக்கவில்லை. எதையும் அவர்கள் முன்கூட்டி சொல்வேதே கிடையாது. 2004ல் சுனாமி வரும்னு எந்த ஜோஷியனாவது சொன்னானா? எந்த ஜோஷியனாவது 2015ல் சென்னை வெள்ளத்தில் மூழ்கும்னு சொன்னானா? எந்த ஜோஷியாவானது கொரோனா வரும்னு முன்னாடியே சொன்னா? இல்லை…, வந்த பிறகு தான் அவன் அவன் கதை உருட்டுறான்.
குறிப்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர், முதலமைச்சர் ஆகவே முடியாது என்று பல ஜோதிடர்கள் சொன்னார்களே இப்போ அந்த ஜோதிடர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? ரஜினிகாந்த் பிறந்த அதே நிமிஷத்தில் 57 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருக்கு. ஆனால் ரஜினி மட்டும் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனாரு. இதை யாராச்சும் கேட்டீங்களா? என கேட்டு அரங்கத்தையே அதிரவைத்தார். அப்போது குறுக்கிட்ட ஓரிரு ஜோசியர், ” நான் சொல்வது நடக்கலைன்னா ரூ.2 கோடி சொத்து எழுதி தரேன் ஒருவேளை நடந்துவிட்டால் நீங்க எழுதி தரீங்களா? என கேட்க அங்கிருந்த அனைவரும் குலுங்க குலுங்க சிரித்துவிட்டார். சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த எபிசோடை நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர் .
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.