அஜித்தின் நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு டெல்லிக்கு ஓடிய சூர்யா – பிரபலம் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

Author: Shree
9 June 2023, 8:13 am

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீப நாட்களாக தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது பொம்மை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தில் ட்ரைலர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வருகிற ஜூன் 16ம் தேதி இப்படம் வெளியாகிறது. இதன் ப்ரோமோஷன் பணிகளில் எஸ்.ஜே சூர்யா பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில், ஆசை படத்தில் அஜித் சோனாக்ஷிக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக கொடுப்பார். அந்த நாய்க்குட்டி டெல்லி ஷூட்டிங்கிற்கு போகவேண்டும். உடனே எஸ்.ஜே சூர்யாவை கூப்பிட்டு அந்த நாய்க்குட்டியை கையில் கொடுத்து அதற்கான டிக்கெட்டும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். 2 நாட்கள் ரயிலில் பயணம் செய்து ஷாட்டுக்கு சரியான நேரத்தில் நாய்க்குட்டியை உயிரோடு கொண்டுப்போய் சேர்த்தார் எஸ்.ஜே சூர்யா. அவர் அந்த அளவுக்கு வேலையை கண்ணும் கருத்துமாக செய்பவர் என இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து பேட்டியில் கூறி அவரை பாராட்டியுள்ளார். இதோ அந்த வீடியோ:

https://www.facebook.com/watch/?extid=WA-UNK-UNK-UNK-IOS_GK0T-GK1C&mibextid=2Rb1fB&v=633485432134572

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…