பல ஃபிளாப் படங்களுக்கு பின் விஷால் நம்பி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. ‘மார்க் ஆண்டனி’ படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையில் செப்டம்பர் 15 இல் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நான் வில்லன் எப்போதும் வில்லனாகவே இருப்பேன் என்ற விஷாலின் மாஸ் டயலாக்கிலும், பொம்பள சோக்கு கேக்குதா என எஸ் ஜே சூர்யா கூறி சுடும் டயலாக்கும்,சில்க் ஸ்மிதாவை அச்சு அசல் உரித்து வைத்த நடிகையின் லுக்கும் டிரைலரை சிறப்பாக கொண்டு சேர்த்துள்ளது.
மேலும் இது டைம் டிராவல் கதைபோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனி படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக அமையும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காமெடி கலந்து வெளியாகி உள்ளதால் இந்த படம் விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் என்ற நம்பிக்கை டிரைலரை பார்த்து வந்துள்ளதாக சில ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.