த்ரிஷா திருமணம்.. புடிச்சது புளியங்கொம்பு தான்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க?..

Author: Vignesh
7 August 2024, 2:07 pm

தமிழ் சினிமாவில், எவர்கிரீன் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. 40 வயதிலும், இவர் ஹீரோயினாகவே நடித்து வருகிறார். அண்மையில், விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்து இருந்தார்.

அடுத்து, அஜித் உடன் விடாமுயற்சி, அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில், விரைவில் பிரபாஸ் ‘ஸ்பிரிட்’ என்னும் படத்தில் ஒரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், இன்னொரு கதாநாயகியாக த்ரிஷாவும் நடிக்க இருப்பதாகவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

trisha - updatenews360 1

ரூபாய் 300 கோடி பட்ஜெட்டில் பிரபாஸின் இந்த 25 வது படம் உருவாக உள்ளது. பிரபாஸ், த்ரிஷா முன்னதாக வர்ஷம், புஜ்ஜி காடு, பௌர்ணமி என மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், த்ரிஷாவிற்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், திரிஷாவுக்கு விரைவில் திருமணம் என தகவல் வெளியாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருந்து வரும் த்ரிஷா இந்த திருமணம் செய்தியை அவர் கண்ணில் பட்டால் நிச்சயம் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!