நான் ஒரு ஏழரை… அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் – திருமண உறவு குறித்து வருந்திய பிரபல நடிகை!

Author: Shree
5 April 2023, 3:22 pm

விமான பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த ரேஷ்மா பசுபுலேட்டி மாடலிங் துறையில் வாய்ப்புகள் கிடைக்க அதன் மூலம் சீரியல் நடிகையானார், ‘வம்சம்’ ‘வாணி ராணி’ ‘மரகத வீணை’ ‘ ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த காட்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனா ரேஷ்மா தொடர்ந்து சில படங்கள் , சீரியல்களில் என பிசியாக நடித்து வந்தார். இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு முகமறியப்பட்டார்.

தற்போது விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மார்க்கெட் பிடித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு “நான் வாழ்வில் நிறைய விஷயங்களில் முயற்சித்து சாதித்துள்ளேன்.

ஆனால், எனக்கு திருமண உறவு மட்டும் சரிப்பட்டு வராது. கணவன் மனைவியாக நன்றாக வாழவேண்டும் என ஆசைப்பட்டு ஒருவருடன் பழகுவேன் ஆனால், அந்த விஷயத்தில் நான் ஒரு ஏழரை என வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/watch?v=2420901968065691

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி