2-வது மனைவியாக சென்ற டாப் நடிகைகள்.. – வாழ்க்கையை அழித்து தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்ட பிரபலங்கள்..!

Author: Vignesh
27 April 2023, 11:05 am

சினிமா வட்டாரத்தில் பெரும்பாலும் இருக்கும் நடிகைகள் உச்சக்கட்ட இடத்தை பிடிக்கிறார்களோ இல்லையோ சொந்த வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறாமல் இருப்பது நிதர்சனமான உண்மை. அப்படி யாரையாவது திருமணம் செய்து அவரைவிட்டு பிரிந்து வேறொருவரை நம்பி 2-ம் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் அப்படி ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் என்று தெரிந்தும் இரண்டாம் திருமணம் செய்து அழிந்தவர்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் பார்ப்போம்.

சாவித்திரி

Savitri_gemini_ganesan_updatenews360


தமிழ் சினிமாவில் நடிகை சாவித்திரி நடிகையர் திலகம், மகாநதி என்று புகழப்பட்டு வந்தவர். சிவாஜி அவர்களுக்கு இணையாக பேசப்பட்டு புகழின் உச்சியில் இருந்த நடிகை சாவித்திரி, ஏற்கனவே திருமணமாகிய ஜெமினி கணேசனை 2-ம் திருமணம் செய்து கொண்டு, தயாரிப்பில் ஈடுபட்டு சாவித்திரி பல கோடி சொத்தையும் இழந்தார். இதனால் மதுவுக்கு அடிமையாகி சாவித்திரி கடைசியில் உருகுலைந்து மரணமடைந்தார்.

மஞ்சுளா

Vijayakumar-Manjula-updatenews360


நடிகை மஞ்சுளா எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுடன் பல படங்களில் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். நடிகர் விஜயகுமாருக்கு 1 மகன் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்து கொண்டு, நான்கு பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அதன்பின் சில காரணங்களால் மார்க்கெட் இல்லாமல் போஜ குடிப்பழக்கத்தால் மரணமடைந்தார்.

ஸ்ரீதேவி

sridevi-updatenews360


இந்திய சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி லேடி சூப்பர் ஸ்டாராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார். ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட போனி கபூரை 2-ம் தாராமாக கல்யாணம் செய்து கொண்டு, யாருக்கு பயப்படுகிறாரோ இல்லையோ போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த அர்ஜுன் கபூருக்கு மட்டும் ஸ்ரீதேவி பயந்து வாழ்ந்து வந்தார். கடையில் துபாயில் நடைபெற்ற திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி அவரது அறையில் மர்மமாக மரணமடைந்தார்.

ஷோபா

Balu-Mahendra-and-Shoba-updatenews360


சினிமாத்துறையில் நடிகை ஷோபாவின் தற்கொலை இன்றளவும் பெரியளவில் பேசப்பட்டு வரும் சம்பவம் . கொடிக்கட்டி உச்சத்தில் இருந்த ஷோபா சிறு வயதிலேயே மிகப்பெரிய இடத்தினை தன் நடிப்பால் ஆக்கிரத்தார். இதனிடையே, இயக்குனர் பாலுமகேந்திராவை நம்பி திருமணம் செய்து கொண்ட ஷோபா தற்கொலை செய்து கொண்டதற்கு அவரும் ஒரு காரணமாக கிசுகிசுக்கப்பப்பட்டது.

இப்படி பிரபல நடிகைகளின் மரணம் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு சம்பவமாக இன்றளவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 609

    2

    1