பக்தி பரவசத்தில் நடிகை த்ரிஷா…கோவை மருதமலையில் சிறப்பு வரவேற்பு…!
Author: Selvan14 December 2024, 5:24 pm
மருதமலை முருகனை தரிசித்த நடிகை த்ரிஷா
நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா நடித்து வரும் சூர்யா 45 பட ஷூட்டிங் விறுவிறுப்பாக கோவையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திடீரென திரிஷா மருதமலைக்கு சென்று,முருகனை தரிசனம் பண்ண வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை த்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆன நிறைவடைந்த நிலையில்,19 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க: பிறந்த நாள் NEXT..பிரெண்ட்ஷிப் FIRST…அல்லு அர்ஜுனை சந்தித்த பிரபல நடிகர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
சூர்யா 45 படக்குழுவினர்,நேற்று மாலை த்ரிஷாவை வரவேற்று கேக் கட்டிங் எல்லாம் செய்த வீடியோவை ட்ரீம் வாரியர் நிறுவனம் வெளியிட்டது.நடிகர் சூர்யா மற்றும் ஆர் ஜே பாலாஜி த்ரிஷாவுக்கு பூங்கோத்துக்களை வழங்கினர்.
இதனையடுத்து இன்றைக்கு மருதமலையில் ஷூட்டிங் நடைபெறுவதால்,அவர் முருகனை சென்று தரிசனம் பண்ணியுள்ளார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் மாலை அணிவித்து,பிரசாதத்தை வழங்கி,புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.நடிகை த்ரிஷாவை காவல் ஆய்வாளர் பொன்னாடை போற்றி வரவேற்றார்.இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.