உயிர் போகும் நேரத்தில் கூட நயன்தாரா அதைத் தான் பண்ணுவார்… பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
Author: Vignesh4 December 2022, 12:00 pm
இன்று தமிழ் சினிமாவுக்கு ஏராளமான மற்ற மொழி நடிகர் மற்றும் நடிகர் வந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் தென்னிந்தியாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகின்றார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளார்கள்.
இப்பொழுது நிலையில் நடிகை நயன்தாரா ஏராளமான திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த வகையில் நடிகை நயன்தாராவை நடிகை மாளவிகா மோகன் ஒரு பேட்டியில் கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார். அது என்னவென்றால் நடிகை நயன்தாரா உயிர் போகும் நேரத்தில் கூட மருத்துவமனையில் முழு மேக்கப்போடும் தான் நடித்திருப்பார். அது கமர்சியல் படமாக இருந்தாலும் எப்படி நடக்கும் என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.
அவர் சொல்லியது ராஜா ராணி திரைப்ப டத்தில் நடிகை நயன்தாரா நடித்த அந்த மருத்துவமனை காட்சியை தான் கலாய்க்கும் வகையில் பேசி இருப்பார். இந்த தகவலை அறிந்த நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி நடிகை மாளவிகா மோகனை திட்டி தீர்த்து வருகின்றார்கள். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது…