விஜய்க்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா.. – அசந்து போய் மாஸ்டர் நடிகர் மகேந்திரன் வெளியிட்ட வீடியோ..!
Author: Vignesh27 April 2023, 3:21 pm
நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சியை திருவிழா போல கொண்டாடுவார்கள்.
இதனிடையே, சமீபத்தில் விஜய்யை பார்க்க வேண்டும் என சிறுமி ஒருவர் விஜய் வீட்டின் கேட் அருகில் இருக்கும் கேமராவில் பேசிய வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை தொடர்ந்து விஜய்யும் சிறுமியிடம் தொலைப்பேசியில், அதன் பின் நேரில் சந்தித்தார்.
இந்த நிலையில், மாஸ்டர் பட புகழ் நடிகர் மகேந்திரன் பெட்ரோல் பங்கில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
மேலும், கை இழந்த நிலையிலும், அவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். தனது போனில் அவர் விஜய் படம் இருக்கும் கவர் தான் போட்டு உள்ளார். மேலும் விஜய்யை சந்திக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசையில் இருந்தும் சந்திக்க முடியவில்லை என தெரிவித்து இருக்கிறார்.