குட்டி பவானி இணையும் கூலி; தினம் வரும் புது அப்டேட்; மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Author: Sudha
8 July 2024, 10:06 am

மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி பவானியாக நடித்து அசத்தியிருந்தார் மகேந்திரன்.100 திரைப்படங்களுக்கும் மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றார்.

காதநாயகனாக தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்ள திரையுலகில் முயன்று கொண்டிருந்தார்.விழா படத்தின் மூலம் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.இதில் சிறு வயது பவானியாக நடிக்கும் வாய்ப்பு மகேந்திரனுக்கு கிடைத்தது.விஜய் சேதுபதிக்கு இணையான புகழும் கிடைத்தது.

ரஜினிகாந்த் அவர்களுடன் படையப்பா படத்தில் இணைந்து நடித்தார் மகேந்திரன்.25 வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் இணைய இருக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி உடன் ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா உள்ளிட்ட சிலர் நடித்து வருகிறார்கள்.

மேலும், இந்த கூலி படத்தில் நடிகர் சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!