மீண்டும் இணைந்த சுந்தர் சி:விஷால் ஜோடி; வரலட்சுமியும் இருக்காங்களா? 11 வருட காத்திருப்பு; ரசிகர்களுக்கு கிடைத்த செம்ம சர்ப்ரைஸ்,..

Author: Sudha
11 July 2024, 12:19 pm

விஷாலின் நடிப்பில் மார்க் ஆண்டனி, ரத்னம் படங்கள் வெளியாகின. மிஷ்கின் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகர் விஷால்.

இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து கிடப்பில் கிடந்த மத கஜ ராஜா படம் திரைக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத கஜ ராஜா படத்தில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார்.

நிதி நெருக்கடி காரணமாக படம் திரைக்கு வராமல் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.

சமீபத்தில் சுந்தர். சி இயக்கி வெளியான அரண்மனை 4 படம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற நிலையில், நிச்சயமாக வெற்றி பெரும் என்ன நம்பிக்கையோடு மத கஜ ராஜா படத்தை வெளியிடும் வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப் படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு அறிவிக்கப்படும் என தெரிகிறது.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…