5000 பேருக்கு இங்க தான் சமைப்போம்…. மாதம்பட்டி ரங்கராஜின் கிச்சன் Tour – வீடியோ!

Author: Rajesh
23 February 2024, 5:47 pm

கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தாலும் அப்பாவின் கைதேர்ந்த தொழிலான சமையல் தொழிலை கையில் எடுத்து கலக்கி வருகிறார் ரங்கராஜ். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 400 திருமணங்களுக்கு பிரமாண்டமான, வித விதமான விருந்துகளை தயார் செய்து அசத்தி வருகிறார்.

அப்பா காலத்தில் சிவாஜி ருசித்த இவர்களின் சமையலை தற்ப்போது பல்வேறு பிரபலங்களின் வீட்டு சமையல்களில் இவர்கள் தான் அசத்தி வருகிறார்கள். இவரது சமையலை அரசியல் பிரபலங்கள் முதல் திரையுல நட்சத்திரங்கள் வரை பலர் ருசித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரும் இவருடைய உணவை ருசித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தி பேட்டி ஒன்றில் தனது கிச்சன் டூர் விளம்பரம் செய்துள்ளார். அதில் பல பிரத்தியேகமான சமைக்கும் இயந்தியரங்கள் மூலம் வேலை சுலபமாக செய்வது எப்படி என்பதையும் விளக்கியுள்ளார். சுமார் 5000 பேருக்கு 2 நபர்கள் மட்டும் இருந்தால் இந்த இயந்திரத்தில் சமைத்திடலாம் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருப்பதையும் அவரது சமையல் கலையையும் பலர் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!