ஆண்களை மயக்க கவர்ச்சியா டிரஸ் போடுறேன்?.. வெளிப்படையாக பேசிய பிக் பாஸ் மாயா..!
Author: Vignesh16 February 2024, 4:37 pm
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் மாயா S கிருஷ்ணன். போல்டான போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்த மாயா குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.அத்தோடு அதிக அளவில் அவர் விமர்சிக்கவும்பட்டார்.
தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். பிக்பாஸில் மக்கள் வெறுக்கத்தக்க போட்டியாளராக மாயா இருந்து வந்தார்.

இந்நிலையில், பாங்காக் அவுட்டிங் சென்று இருந்த மாயா அங்கு கிளாமர் ஆடையும் பிகினி ஆடையும் அணிந்திருந்த வீடியோக்களை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த சிலர் ஆண்களை மயக்க தான் கவர்ச்சி ஆடை போட்டு இணையதளத்தில் பகிர்ந்து உள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளித்த மாயா இங்கு இருக்கும் எல்லா பெண்களுக்கும் மற்றவர்களை கவரவும், நல்லா தெரியும் கிளாமராக தெரியனும் என்பதற்காக கிளாமர் ஆடை அணிவது கிடையாது.

அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை அவர்கள் போடுகிறார்கள். அடக்கமாக ஆடை அணிந்தால் தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது கிடையாது. உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ பிகினி உள்ளாடையை காட்டுவது போல் ஆடை அணிவது மினி ஸ்கெட் அணிவது ஆபாசமென்று அர்த்தம் கிடையாது. இந்த சமூகம் என்ன சொன்னாலும், உங்கள் காதில் கேட்டுக் கொள்ளாமல் உங்களுக்கு என்ன பிடித்து இருக்கிறதோ அந்த ஆடையை அணியுங்கள். சுதந்திரமாக இருங்கள் என்றுதான் அர்த்தம். மற்றவர்களை கவர என்றும் அவர்கள் அந்த ஆடையை அணிவது கிடையாது. அப்படி நடக்கவும் நடக்காது என்று மாயா பதிலடி கொடுத்துள்ளார்.