என்னை மட்டும் ரசியுங்கள் மற்றவர்களை.. ஏஜென்ட் டீமுக்கு கட்டளையிட்ட மாயாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
18 January 2024, 6:07 pm

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் மாயா S கிருஷ்ணன். போல்டான போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்த மாயா குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

maya s krishnan- updatenews360

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.அத்தோடு அதிக அளவில் அவர் விமர்சிக்கவும்பட்டார்.

தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். பிக்பாஸில் மக்கள் வெறுக்கத்தக்க போட்டியாளராக மாயா இருந்து வந்தார்.

Maya-S-Krishnan

இந்நிலையில், மாயா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீண்ட ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். எல்லோருக்கும் என்னுடைய நன்றி நீங்க என் மீது இவ்வளவு பாசம் அன்பு வச்சிருக்கீங்கன்னு நினைக்கல, என்னை நீங்க அன்புமழையில் நனைய வச்சிட்டிங்க என எனது மரியாதையும் நிபந்தனையும் அற்ற அன்பும் இறுதிவரை என் இதயத்தில் இருக்கும். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அந்த 105 நாட்கள் மரணப்படுக்கையில் மறக்காது உங்களுக்காக தான் வேலை பார்க்க போகிறேன்.

எல்லாமே உங்களுக்கு தான், எனக்காக நீங்கள் நிறைய ஃபைட் பண்ணி இருக்கீங்க.. அதுக்காக கடைசிவரை நன்றியோடு இருப்பேன். எனக்கு ஒரே ஒரு ஆசை என் ரசிகர்களாக நீங்க இருந்தால் என்னை மட்டும் ரசியுங்கள், மற்றவர்களையும் ரசியுங்கள் ஆனால், வேறு ஒருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும், கூட அவர்களை வெறுக்க வேண்டாம் வேணும்னா காதலிங்க,.. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போய் நம்ம வேலையை பார்க்கலாம்.. மீண்டும் சந்திப்போம்,.. அன்புடன் என்று மாயா வெளியிட்ட பதிவுக்கு நெட்டிசன்கள் அதிகமாக மாயாவை கலாய்த்து போஸ்ட் போட்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த சீசனில் போட்டியாளராக வந்த தனலட்சுமி மட்டும் மாயாவிற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 434

    0

    0