கடுப்பான மாயா.. அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா.. வெளு வெளுனு வெளுத்த விஷ்ணு..!

Author: Vignesh
4 October 2023, 10:40 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது. பிக் பாஸ் இன் இந்த ட்விஸ்ட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ் 7ல் இன்று மூன்றாவது நாளில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், புதிதாக நவ் யுவர் ஹவுஸ் மேட்ஸ் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணு மற்றும் மாயா இருவரும் மோதி கொள்கிறார்கள். முதல் நாள் வாக்குவாதம் மோதல் எதுவும் இல்லாமல் சென்ற நிலையில் நேற்று இரவு கடுமையான வாக்குவாதங்கள் அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதை தற்போது மூன்றாவது நாள் டாஸ்க்கில் அவன் எனக்கு மாமனா மச்சானா என போட்டியாளர்கள் பரபரப்பாக வாக்குவாதம் செய்து கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்