மயில்சாமி இறந்த 4 மாசத்துல மகனுக்கு இப்படி ஒரு நிலையா?.. மருமகள் எடுத்த விபரீத முடிவு..!
Author: Vignesh13 July 2023, 2:15 pm
திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
நகைச்சுவை, குணசித்திரம் என தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்திருந்த நடிகர் மயில்சாமி மேடைகளில் மிமிக்ரி செய்வதிலும் தனி திறமை கொண்டவர்.
இந்நிலையில், நடிகர் மயில்சாமி கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த சிவராத்திரி பூஜைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவரது மரணம் சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நடிகர் மயில்சாமி குறித்து பலர் பெருமையாகவும் புகழ்ந்தும் இரங்களையும் பிரபலங்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் மயில்சாமி இறந்து 4 மாதங்கள் ஆகின்றநிலையில், அவரின் வீட்டில் பெரிய பிரச்சனை எழுந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் சினிமாவில் நாயகர்களாக இருந்து வருகிறார்கள். இருவருக்குமே சினிமா பிரபலங்கள் மத்தியில் மயில்சாமி திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் வீட்டில் சிலசில பிரச்சனைகள் அவ்வப்போது எழுந்து வந்துள்ளது. ஆனால் மயில்சாமி இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மேலும், மயில்சாமியின் மனைவியுடன் மருமகள்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்களாம். இதனை மயில்சாமி இடம் அடிக்கடி கூறியதோடு அவர் இதனை வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டும் இருந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, தற்போது இருவரின் மனைவிகளும் நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வேண்டும் என வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த விஷயம் அவர்களின் உறவினர் வாயிலாக தற்பொழுது வெளியே கசிந்து உள்ளது. இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள் இதற்கு தான் வீட்டில் ஒரு பெரிய மனுஷர் வேண்டும் என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.