திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். நகைச்சுவை, குணசித்திரம் என தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்திருந்த நடிகர் மயில்சாமி மேடைகளில் மிமிக்ரி செய்வதிலும் தனி திறமை கொண்டவர்.
இந்நிலையில், நடிகர் மயில்சாமி கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த சிவராத்திரி பூஜைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நடிகர் மயில்சாமி குறித்து பலர் பெருமையாகவும் புகழ்ந்தும் இரங்களையும் பிரபலங்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவருமே சினிமாவில் ஹீரோவாக தான் முயற்சித்து வந்தனர். சில படங்களில் அவர்கள் நடித்திருந்தாலும், அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அவர்களுக்கான வரவேற்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தற்போது நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி விஜய் டிவி சீரியலில் ஹீரோவாக நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தங்கமகள் என்ற புது சீரியலில் தான் அவர் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிப்பதாகவும் சீரியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.